Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல்கள் வந்து போனாலும் எமது பிரச்சனைகள் தொடர்கின்றன:வவுனியா முகாம் மக்கள்.

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றத்தை எதிர்நோக்கி செட்டிகுளம் மனிக்பாம் முகாம்களில் எஞ்சியிருப்பவர்கள் தமக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகக் தெரிவிப்பதாக பிபிசி தமிழோசை செய்திவெளியிட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரின்போது வன்னிப்பிரதேசத்தில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்து வந்து மனிக்பாம் முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள்.

இவர்கள் அனைவரையும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிடுவார்கள் என அரசு ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது.

எனினும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவடையாத காரணத்தினால் மிள்குடியேற்ற நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், எனினும் இவர்களில் கணிசமான தொகையினரை மீளக்குடியர்த்திவிட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, வடபகுதியில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியன நடந்து முடிந்துவிட்டன. தொடர்ந்து ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியும் குறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையிலும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையென அவர்கள் கூறுவதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version