கேணல் ராம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பினர் வெளியிட்டு வரும் பிரச்சாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அரசுடன் இணைந்து செயற்படுவதாகக் வெளியான செய்திகளை ஆதாரம் காட்டி, இவரைப் பயன்படுத்தி தேர்தலைத் திசைதிருப்பும் தாக்குதல்களை அரசே மேற்கொள்ளக் கூடும் என்று இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் ஊகம் தெரிவித்தார்.