
இலங்கையின் குண்டர்படை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா பல குற்றச் செயல்களில் ஈடுபட்டடுள்ளதாக போலிஸ் முறைப்பாடுகள் உள்ளன. ஒரு வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இலங்கையிலிருந்து மாலக தப்பிச்செல்வதற்காக அமரிக்கத் தூதரகம் விசா வழங்கியுள்ளது. தான் இரண்டு மாதங்கள் அமரிக்காவிற்குக் கல்விகற்கச் செல்வதாக மாலக தெரிவித்திருந்தார். தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு எந்த அடிப்படையில் அமரிக்கா விசா வழங்க முடியும் என லங்கா மிரர் அமரிக்கத் தூதரகத்திடம் வினவிய போது, அது குறித்து தாம் கருத்து கூற முடியாது என்றும் விசா நடைமுறைகள் இரகசியமானது என்றும் தெரிவித்க்தனர்.
இதுவரை இலங்கையில் கிரிமினல் வேலைகளில் மறைமுகமாக ஈடுபட்டுவந்த அமரிக்க அரசு இப்போது வெளிப்படையாகவே அதனை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.