Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேடகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் இலங்கை அரச சார்புக் குழு வன்முறை

ஜனநாயகம், புரட்சி,மார்க்சியம் என்ற தலையங்ககளோடு இலங்கை அரச ஆதரவு சக்திகள் மீண்டும் இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் தலையெடுக்கின்றன. இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த தீபாவளிக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்திருந்த சிலர் 18.08.2012 அன்று ரொரன்டோ நகரில் இடம்பெற்ற தேடகம் குழுவினரால் ஒழுங்கு செய்ய்ப்பட்ட ஒன்று கூடல் ஒன்றில் வன்முறையில் ஈடுபட்டனர். புலம் பெயர் நாடுகள் முழுவதிலும் ஐந்திற்குக் குறைவான தனிநபர்களின் அரச சார்புக் கூட்டணி ஒன்று மிரட்டல், வன்முறை, காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு சக்திகளைக் குறிவைக்கும் இவர்கள் ஏகாதிபத்திய நிதிக் கொடுப்பனவு நிறுவனங்கள் உட்பட பெரும் பணபலத்தைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். போராட்ட சக்த்திகள் மீதான தனிநபர் தாக்குதல்கள் இவர்களின் முதன்மைத் தந்திரோபாயமாகக் காண்படுகிறது.
தவறான தகவல்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் வெளியிடுதல், ஜனநாயக முற்போக்கு சக்திகளை அன்னியப்படுத்தல் போன்ற அனைத்து தளத்திலும் இயங்கும் இந்தச் சிறிய மாபியாக் குழுக்கள் சட்டரீதியாகவும் வெகுஜன மட்டத்திலும் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

Exit mobile version