இலங்கை சிங்களம் பேசுபவர்களுக்கான நாடு என்பதையும் சுய நிர்ணய உரிமைக்காக ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் போராடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்பதையும் ராஜபக்ச இதனூடாகத் தெரிவித்துள்ளார். தமிழிலும் பாடப்பட்ட ‘நமோ நமோ தாயே’ என்ற இலங்கைத் தேசிய கீதத்தை பேரினவாத பாசிஸ்டுக்களான ராஜபக்ச பயங்கரவாதக் குடும்ப ஆட்சியே சிங்களம் மட்டும் என மாற்றியமைத்தது.
இலங்கையின் தேசிய கீதத்தில் சிங்களமொழியுடன் தமிழ்மொழியையும் சேர்த்துக் கொள்வது தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவையின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளார்.
தான் இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வந்தால் சிங்கள பௌத்த மக்களுடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிவரும்.
இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்க தான் தயார் இல்லை என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் தெரிவித்துள்ளார்.
பேரினவாதத்தை ஆளும் அரசுகளே வெளிப்படையாகத் தூண்டும் நாடுகளில் இலங்கை பிரதானமானது. சிங்கள மக்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக பேரினவாதிகளின் உணர்ச்சியூட்டும் நடவடிக்கைகள் குறித்து சிங்கள மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும்.