Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசிய கல்விக்கு இருந்த கௌரவத்தையும் அதன் தரத்தையும் அரசாங்கம் சீரழித்து விட்டது … அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

உலகளவில் தேசிய கல்விக்கு இருந்த கௌரவத்தையும் அதன் தரத்தையும் அரசாங்கம் சீரழித்து விட்டது என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வெளியாகியுள்ள அனைத்து பெறுபேறுகளையும் உடனடியாக ரத்துச்செய்து விட்டு மீள் திருத்தத்திற்கு உட்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தேசியளவில் மாணவர் போராட்டங்கள் மேலோங்கும் என்றும் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று புதன் கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக, வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை விமர்சித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அதன்போது உரையாற்றிய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டளர் சஞ்சீவ பண்டார மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஒரு பரீட்சையினைக் கூட நடத்த முடியாதளவிற்கு அரசாங்கம் சீரழிந்துள்ளது. தேசிய கல்வியின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டுள்ளதுடன் மாணவ சமூகத்தை படுபாதாளத்தில் தள்ளி விட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள உயர் தர பெறுபேறுகள் நம்பகத் தன்மையற்றவையாகும். இந்தப் பெறுபேறுகளைப் பரீட்சைக்கு தோற்றிய எந்தவொரு மாணவனும் ஏற்றுக்கொள்ளக்கூடாது

Exit mobile version