Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 40 வது ஆண்டுவிழாவும் மாநாடும்

Part13தேசிய கலை இலக்கியப் பேரவை 2013இல் தனது 40வது ஆண்டில் கால் பதிக்கிறது. இதன்முகமாக விபுலானந்தர் ஆய்வரங்கும் கலை நிகழ்ச்சிகளும் எதிர்வரும் 26ம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் காலை 9.00 மணிமுதல் நடைபெறும்.

விபுலானந்தர் ஆய்வரங்கின் காலை அமர்வு பேராசிரியர் சி. சிவசேகரத்தின் தலைமையில் இடம்பெறும். இதில் ‘விபுலானந்தரும் சமூக அமைப்புகளும்’ என்ற தலைப்பிலான ஆய்வுரையை ஆய்வுரை: ச. சத்தியதேவனும் கருத்துரையை ஜெ. சற்குருநாதனும் நிகழ்த்த ‘விபுலானந்தரை உருவகப்படுத்தல்’ என்ற தலைப்பில் ஆய்வுரையை சு. நிர்மலவாசன், து. கௌரீசன் ஆகியோரும் கருத்துரையை சோ. தேவராஜாவும்; ‘ஒடுக்கப்படவர்களினதும் சுரண்டப்படுகின்றவர்களினதும் விமோசனம்’ என்ற தலைப்பில் தி. அனோஜன் ஆய்வுரை நிகழ்த்த த. கோபாலகிருஷ்ணன் கருத்துரை நிகழ்த்துவர்.

பேராசிரியர் சி. தில்லைநாதன் தலைமை வகிக்கும் மாலை அமர்வில் ‘தாய் மொழிமூலம் கல்வியும் அரச கருமங்களும்’ என்ற தலைப்பிலான ஆய்வுரையை க. ஆதித்தவர்மனும் கருத்துரையை சிவ. இராஜேந்திரனும் ‘நீரரமகளிர்: புனைவும் புரிதலும்’ என்ற தலைப்பிலான ஆய்வுரையை கி. கலைமகளும் கருத்துரையை மு. மயூரனும் ஆற்றுவர். அதைத் தொடர்ந்து ச. தனுஜன் ‘பண்பாட்டு மேம்பாடு பற்றி விபுலானந்தர்’ என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்க க. தணிகாசலம் கருத்துரை வழங்குவார்.

கலை நிகழ்ச்சிகள் மாலை 4.30க்கு ஆரம்பமாகும். இதில் தலைமையுரையை தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் பேராசிரியர் சி. தில்லைநாதன் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆண்டுமலரான புதுவசந்தம் இதழ் வெளியிட்டு வைக்கப்படும். அதைத் தொடர்ந்து மலையகப் பேரவையினர் வழங்கும் மலைச்சாரல்: மலையக எழுச்சிப் பாடல்கள் நிகழ்வை சந்திரலேகா, கிங்ஸ்லி கோமஸ், சிவ. ராஜேந்திரன், ஏ.சி.ஆர். ஜோன், சி. மோகன், வே. தினகரன் ஆகியோர் நிகழ்த்துவர்.

அடுத்து, “போகாத ஊரும் பொய்யான வழியும்” என்ற தலைப்பிலான கவியரங்கம் சோ. தேவராஜாவின் தலைமையில் இடம்பெறும். இதில் மு. மயூரன், வி. விமலாதித்தன், ச. சுதாகர்,
தெ.ஞா. மீநிலங்கோ, தி. அனோஜன் ஆகியோர் கவியுரைப்பர். பின்னர் “மூன்றாவது கண் நண்பர்கள் குழு” வழங்கும் “மட்டக்களப்பு மரபுசார் வாத்திய இசை” இடம்பெற்று இறுதி நிகழ்வாக யாழ்ப்பாணப் பேரவையினர் வழங்கும் “வீடுபேறு” என்ற தலைப்பிலான நாடகம் இடம்பெறும்.

விபுலானந்தர் ஆய்வரங்கிலும் கலை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்துரையாடல்களிலும் பங்குபற்றி நிகழ்வு சிறப்பிக்கப் பங்களிக்ககுவும் கண்டுகளிகூருமாறும் தேசிய கலை இலக்கியப் பேரவையினர் மிக்க அன்புடன் அனைத்துக் கலை இலக்கிய ஆர்வலர்களையும் கேட்டுக் கொள்கின்றனர்.

Exit mobile version