தொடர்ந்து சட்டத்தரணி இராகலை மோகன் ‘மலையக மக்களின் வாழ்வியலும் பச்சைரத்தமும்’ எனும் தலைப்பில் ஆய்வுரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மலையக மக்கள் எனும் தனியான இனம் தானாக தோன்றியதொன்றல்ல மாறாக உலக நாகரீகத்தோடு (ஹோமோ அரக்டர்ஸ்) யுகத்துடன் தொடர்ந்து வந்த தற்போதையினத்தின் பரினாம வளர்ச்சி நிலரீதியான பிளவின் பின்பே உருவானது. தற்போதைய ஹோமோ சேபியன் யுகம் ஏறத்தாழ 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. ஆரம்ப காலத்தில் புவி ஓரே கண்டமாகவே இருந்தது. கடல் நீர்மட்டமும் குறைவாக இருந்தது பின்பு உலகில் ஏற்பட்ட இயற்கை மாற்றங்களினால் திவுகளும், கண்டங்களும் உருவாகி நகர்ந்தன என விஞ்ஞான பூர்வமாக நிறுவினார்.
தொடர்ந்து இந்த இனத்தின் தொன்மைப்பற்றியும் பச்சைரத்தம் கூறும் புலம்பெயர்வு பொருளாதார ரீதியாக, பொருளாதார நோக்கம் கொண்டே இடம் பொற்றதாகவும் வாழ்வுரிமையை பாதுகாக்கவேஇவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தனர். அக்காலப்பகுதி ஜரோப்பியர் குடியேற்ற நாடுகளாகவே இவை இருந்தன என்பதால் ஓரே இறைமைக் குட்பட்டதாக இருந்தன. அன்று இந்தியா, இலங்கை என எல்லை இல்லை மாறாக பிரித்தானிய ஆட்;சிப்பிரதேசம், பிரித்தானிய குடிகளாகவே மக்கள் இருந்தனர். 1823ம் ஆண்டு தொடக்கம் பெருந்தோட்ட பொருளாதாரத்தினை மையமாக்கொண்டு வரவழைக்கப்பட்டவர்கள் சட்டரீதியான ஆவணங்களுடன், சட்டப்படியே கடல் தாண்டி வந்தனர் கள்ளத்தோனிகள் இல்லை, இவர்கள் அனுபவித்த துன்பங்கனில் சில பற்றி பச்சை ரத்தம் கூறுகின்றது. வேறு பல இலக்கியங்களும், திரைப்படங்களும் இத்துன்பம்பற்றியும் கூறும்.
இலக்கியங்களில் அடிப்படையில் இராவணன் வாழ்ந்த காலத்திற்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழினம் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. அவ்வினத்தின் தொடர்ச்சியாக சங்ககாலம், சங்கமருவியகாலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், 21;ம் நூற்றாண்டு என எமது வரலாறு நீண்டு வந்துள்ளது.
தொன்மையான தமிழ் மக்களின் வரலாறே எமது வரலாறு! இந்திய அரசும் தமிழக அரசியல் வாதிகளும் இலங்கையில் ஈழப் பிரச்சினையை மட்டும் கணக்கிலெடுத்தனரேயன்றி இந்தியாவிலிருந்து வறுமை காரணமாக பொருளாதார மீட்சிக்காக இலங்கை வந்த ஓர் தொகுதியினரை மறந்தும், மறுத்தும்; வந்துள்ளனர். 1948,1949,1964 ஆண்டுகளில் இந்திய காங்கிரஸ் கட்சி, இந்திய தலைவர்கள் மலையக மக்களின் பிரச்சினையின் மீது அக்கறையற்றவர்களாக இருந்துவந்துள்ளதுடன், இலங்கையின் அரசியல் தலைவர்களும் மலையக மக்களை அரசியல் பகடைகளாக பயன்படுத்தி வந்துள்ளனர.;
எனவே எமது பூர்வீகம் பழைமையானது, நாம் உலகில் மூத்த, நாகரீகமடைந்த இனம், எங்களின் மொழி, பண்பாடு என்பன பழையதும் தனித்துவமானதும் அர்த்தமுள்ளதுமாகும். நாம் அடங்கி ஒடுங்கி எம்மை தாழ்த்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை. எம்மால் உலகத்துக்கு சட்டங்கள், கட்டடக்கலை, சிற்பம், இலக்கியம், மருத்துவம் என பல துறைகள் முன்னோக்கிய எடுத்துக்காட்டுகள் உள்ளன. மலையக மக்களும் அவ்வழிவந்தவர்கள். எனவே எல்லாவித துறைகளிலும்; நாம் முன்னோக்கி நடப்பதுடன், எம்மை நாமே தலைமையேற்று நடத்த வேண்டும்.
கல்வி, பண்பாடு அறிவியல் என எல்லாத்துறைகளிலும் நாம் முன்னேற்றமடைவதுடன், உலகமயமாதல், நவகாலனியாதிக்கத்திலிருந்தும், மாயைகள், போதைகளிலிருந்தும் விடுப்பட்டு எமது வரலாற்றை தெரிந்து தெளிவான சமூக முன்னேற்றத்துக்காக இலட்சிதுடன் செயற்பட வேண்டும், சிறுவர், இளைஞர், யுவதி, தொழிலாளர், விவசாயிகள், கற்றோர் என எல்லோரும் மலையக சமூக விடுதலையை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் எனக் கூறினார்.
தொடர்ந்து பத்மஸ்ரீ தமது கருத்துரையில் தவமுதல்வனால் ஆக்கப்பட்ட ‘பச்சைரத்தம்’ ஆவணத்திரைப்படம் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த மலையக தமிழ் மக்கள் பட்ட அவலங்களை எடுத்துக்காட்டியப்படமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆவணத்திரைப்படம் என்பது தனி மனித சம்பந்தமாகவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. (உதாரணம்) இஸ்ரேலிய ‘எழுமிச்சை அரசியல்’ என்ற ஆவணப்படத்தில் ஓர் எழுமிச்சை மர தோட்டத்தை வயது முதிர்ந்த ஒரு பெண்மணி ஒருவர் வைத்து ஜீவனாபாயம் நடத்தி வருவதை அந்த தோட்டத்தின் பக்கத்தில் வந்த குடியேறும் அரசியல் வாதி ஒருவர் அவரது பாதுகாப்பு தொடர்பாக இந்த எழுமிச்சை தோட்டத்தை அழிப்பதாக படமாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமள்ளாமல் இந்தியாவிலே விதவைகள் டில்லியிலிருந்து 145கிஃமீ தூரமுள்ள மதுரையில் ஓர் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தனியாக எவ்வித பாதுகாப்பு இன்றி இறந்தால்கூட புதைக்காமல் குப்பைக்களைப் போல் நிர்க்கதியாக விட்ட சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஆவணப்படங்களை எமது மக்கள் பாரப்;பதன் மூலம் எமது வாழ்வினையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டிய காலச்சூழ்;நிலையில் நாம் உள்ளோம், எனவே இந்த ஆவணத்திரைப்படம் மட்டுமல்லாமல் புத்தகங்களை வாசித்தல் வீதி நாடகங்கள் காண்பித்தல்;, மற்றும் எமது பாரம்பரிய கலைகளை காப்பாற்றுவதன் மூலமும் எமது உரிமைகளையும், தேசியத்தினையும் காத்துக்கொள்ள முடியும் எனக்கூறினார்.
பின் பார்வையாளர் கருத்துரை, கலந்துரையாடலின் பின்பு மகேந்திரனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.