தீவிர வலதுசாரிகளான பிரித்தானியாவிற்கே முதலிடம் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு போட்டியாக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் 250 பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளதாகப் போலிஸ் தரப்புத் தெரிவிகிறது.
தீவிர வலதுசாரிக் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதே என்றும் போலிஸ் அதனை மிகைப்படுத்துகிறது என்றும் பாசிசத்திற்கு எதிரான ஐக்கியம் என்ற அமைப்பினர் கூறுகின்றனர்.
ஐரோப்பா முழுவதும் பெருகிவரும் இடதுசாரி அலைக்கு எதிராக நிறவாத அமைப்புக்களை அதிகாரவர்க்கம் திட்டமிட்டு ஊக்கப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகின்றது. பிரான்சில் தேசிய முன்னணி என்ற நிறவாதக் கட்சியும், ஜேர்மனியில் தேசிய ஜனநாயகக் கட்சியும், கிரேக்கத்தில் தங்க விடியல் என்ற கட்சியும். டெனிஷ் மக்கள் கட்சி என்ற டென்மார்க் கட்சியும், ஓஸ்திரிய சுதந்திரம் என்ற ஓஸ்திரியக் கட்சியும் தம்மைத் தேசியவாதக் கட்சிகள் எனக் கூறுகின்றன.
தமது நாட்டு மக்களின் நலனுக்காகப் போராடுவதாகக் கூறும் இக் கட்சிகள் ஏனைய மக்கள் மீது வன்முறையப் பிரையோகின்றன. வெறுப்புணர்வையும், இனவாதத்தையும், நிறவாதத்தையும் தூண்டுகின்றன. இடதுசாரிகளுக்கும், வெளி நாட்டவர்களுக்கும், வெள்ளையர் அல்லாதோருக்கும், அகதிகளுக்கும் எதிரான வெறுப்பூட்டும் கருத்துக்களைப் பரப்பிவருகின்றன.