எதிர்க்கட்சித் தலைவர் ரனில் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க்கையில்,யுத்த வெற்றியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பெரும் செலவில் தேசிய வைபவம் நடைபெறவிருக்கின்ற நிலையில் வன்னி மக்கள் கோழிக் கூட்டிலும் ஜெனரல் சரத் பொன்சேகா சிறைக்கூண்டிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
யுத்த வெற்றி வீரனை சிறையில் வைத்து கொண்டும் மக்களை அடைத்து வைத்துக் கொண்டும் இருப்பதைக் கண்டு இயற்கையும் கண்ணீர் வடித்து அதனோடு இணைந்து கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.