அரச துணைக்குழுக்களான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான் குழு) மற்றும் சிறீ ரெலொ போன்றவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயாராவதாக அறிவித்துள்ளன. மகிந்த ராஜபக்சவின் அதி நம்பிக்கைக்கு உரிய பயங்கரவாத, மக்கள் விரோதக் குழுக்களாகச் செயற்பட்டுவந்த இக் குழுக்கள் தமது இருப்பைத் தொடர்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடியுள்ளன. இலங்கை இந்திய அரசுகளுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளை விற்பனை செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிள்ளையான் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே வேளை புளட் தலைவர் சித்தார்தனுக்கு இலங்கை மகிந்த அரசு துணை மந்திரிப் பதவி வழங்குவதற்காக அவரை அணுகியுள்ளதாகவும் தெரியவருகிறது.