Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – கோதாபாயவே முழுப்பொறுப்பு : சரத் பொன்சேகா

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் அனைத்து பொறுப்புகளையும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் இராணுவத் சரத பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணைகள் முடிவடைந்து மேல்நீதிமன்றில் இருந்து வெளியேறும் வேளையில் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டுநாயக்க வர்த்தக வலய ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதானது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் பொலிஸார் மீது வீண் பழி சுமத்தக் கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

அத்தோடு இந்த சம்பவத்திற்கான முழுப் பொறுப்பினையும் பாதுகாப்பு செயலாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version