Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொழிலாளர்களைக் கைவிட்ட அரச சார்புத் தொழிற்சங்கங்கள்

வரவிருக்கின்ற தீபாவளியை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத் தொகையினை 6000 ரூபாவாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அறிக்கையும் விடுக்கப்பட்டு வந்த நிலையில், பதுளை மாவட்டப் பெருந்தோட்டங்களில் 4500 ரூபாவே முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பனிகள் தாமாக முன்வந்தே முற்பணத்தினை 500 ரூபாவால் அதிகரித்து வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரித்திருப்பதனால் இம் முறை தீபாவளி முற்பணத்தினை அதிகரிக்கக் கோரி பல தொழிற்சங்கங்கள் அறிக்கைகளை விட்டிந்தன. சில பிரமுகர்கள் மானிய அடிப்படையில் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் அறிக்கைகளை விட்டிருந்தார்கள். ஆயினும் அதற்கான ஏற்பாடுகள் எதனையும் உரிய முறையில் மேற்கொள்ளததனாலேயே இந்நிலை எற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அறிக்கை விட்டவர்கள் முற்பண அதிகரிப்புத் தொடர்பான விடயங்களை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கம்பனிகளுக்கும் தெரியப்படுத்தவில்லை.
மக்களுக்கு பெரும் சேவையாற்றப் போவதாக பல தொழிற்சங்கப் பிரமுகர்களும் அரசியல் வாதிகளும் கூறி அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிற நிலையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளி முற்பணம் அதிகரிக்கப்படும் என்று தொழிலாளர்கள் நம்பியிருந்த நிலையில் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Exit mobile version