Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொடரும் இராணுவ மயமாக்கல் : யாழ்ப்பாணத்தில் புதிய இராணுவத்தளம்

யாழ்ப்பாணத்தில் முன்னர் சிங்கள மகாவித்தியாலயம் அமைந்த இடத்தில் இராணுவத்தினருக்கான புதிய தளம் ஒன்றை அமைப்பதற்கு காணி வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சந்திரசிறி கடும் உத்தரவிட்டுள்ளார்.

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் கீழ் சிங்களப் பாடசாலைக்கு சொந்தமான இக்காணியை வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் உடனடியாக இராணுவ முகாம் அமைப்பதற்காக வழங்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். நகரில் ஒ.எல்.ஆர் மகா வித்தியாலயம் மற்றும் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் அருகிலேயே இக்காணி அமைந்துள்ளது.

இக்காணியில் அரியாலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 வது படைப் பிரிவுக்காக பாரிய தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இக்காணியை வழங்குமாறு இராணுவம் கோரியதற்கு இணங்கவே ஆளுநர் இதனைத் தாரை வார்த்துள்ளார்.

Exit mobile version