தெலங்கானாவில் இன்று நடந்து வரும் முழு அடைப்பு காரணமாக பல இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இக்குழு அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தர விட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மற்றும் தெலங்கானா மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழுவும், தெலங்கானா பகுதியில் இன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து தெலங்கானா பகுதியில் உள்ள ஹைதராபாத், ஆதிலாபாத், நிஜாமாபாத், நல்கொண்டா, கரீம்நகர் உள்பட 10 மாவட்டங்கள் முடங்கியுள்ளன. அங்குள்ள கடைகள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.