1971 ஆம் ஆண்டு இராணுவத்தின் சித்ரவதை முகாம் ஒன்று குறித்த இடத்தில் இயங்கியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானiதா அடுத்து, அந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட இடத்தில் காவற்துறையினரின் விசேட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தற்போது மீட்கப்பட்டுள்ள எலும்பு கூடுகள் மாத்தளை தலைமையக காவற்துறையின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 26 ஆம் திகதி மாத்தளை வைத்தியசாலையின் உயிர் வாயு பிரிவிற்காக குழி ஒன்றை தோண்டிய போது, உக்கி போன நிலையில், பல மனித எலும்பு கூடுகள் கிடைத்துள்ளதாக மாத்தறை தலைமையக காவற்தறையினர், நீதிமன்றத்தில் அறிவித்ததை அடுத்து, மேலும் அந்த குழியில் மனித எலும்பு கூடுகள் இருக்கின்றவா என்பதை கண்டறிய அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு மாத்தளை மேலதிக நீதவான் உத்ரவிட்டதை அடுத்து, நேற்று முன்தினம் முதல் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
நேற்றைய தினம் வரை 06 மண்டையோடுகளுடன் எலும்புகள் மீட்கப்பட்டன. இந்த அகழ்வு பணிகள் மாத்தளை நீதிமன்ற வைத்திய அதிகாரி அஜித் ஜயசேனவின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை 8 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் பெய்த கனமழை காரணமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டன. மாத்தளை வைத்தியசாலை பூமியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த மனித புதைக்குழி 71 ஆம் ஆண்டு ஜே.வி.பிதலைமையிலான கிளர்ச்சியின் போது கொலை செய்யப்பட்டவர்களின் எலும்புகளாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இரண்டு ஜே.வி.பி கிளர்ச்சிகளிலும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டடனர்.