Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தெற்காசிய நிதி மூலதனத்தின் தலைநகரமாகும் கொழும்பிற்கு மோடி பயணம்

Mahinda-Modi-01உலகின் பல்தேசிய வியாபார நிறுவனங்களதும், பணத் திருடர்களதும் சொர்க்க புரியாக மாறியிருக்கும் இலங்கையின் தலை நகரைத் தெற்காசிய நிதி மூலதனத்தின் தலை நகரமாக மாற்றும் திட்டம் நரேந்திர மோடியின் வருகையின் பின் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சவிற்கு அதி முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இலங்கையில் பயங்கரவாதத்தின் பேரால் மக்கள் எதிர்ப்பின்றி இராணுவ மயப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மேலும் பலப்படுத்தப்படுகின்றன. இதனோடு கூடவே இனச்சுத்திகரிப்பு கட்டவிழ்த்து விடப்படுகின்றது. சட்டவிரோத கொள்ளைப் பணத்திற்காக இலங்கை அகலத் திறந்துவிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் நிதி மூலதனத்தின் தலை நகரமாக உருவாகி வந்த மும்பை இலங்கையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதை பல பொருளியலாளர்கள் சுட்டிக்காட்ட ஆரம்பித்துள்ளனர். இலங்கையை நோக்கி நகரும் பல்தேசிய வியாபாரிகள், கொள்ளையர்களுக்கு ஏற்ற நுகர்வுக் கட்டமைப்புக்கள் மற்றும்   கட்டுமானப் பணிகள் போன்றன ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பல்தேசியக் கொள்ளையர்களுக்கான களியாட்ட விடுதிகள், கசீனோக்கள், பாலியல் தொழிற்சாலைகள், மாளிகைகள், தங்குமடங்கள் போன்றன கட்டமைக்கப்படுகின்றன. இவற்றைப் பாதுகாக்கும் இராணுவமும் போலிஸ் படையும் வடக்கையும் கிழக்கையும் தளமாகக் கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளன.

சிங்கப்பூரிலும் மும்பாயிலும் கிடைக்காத கொலைப்படைகளின் பாதுகாப்பு இலங்கையில் கிடைக்கிறது. அமைதிப்போராட்டம் நடத்தினாலே துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை இராணுவம் வெலிவேரியாவில் நிரூபித்துள்ளது.

இவற்றை இனி நரேந்திர மோடியும் மகிந்த ராஜபக்சவும் இணைந்தே நிறைவேற்றுவார்கள். இந்தியாவில் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் வெறித்தனமாகப் பிரச்சாரம் செய்து செயற்கையாக உருவாக்கிய நரேந்திர மோடி என்ற கொலைகாரனும், மகிந்த ராஜபக்ச என்ற கிரிமினலும் இலங்கையை ஒட்டச் சுரண்டுவார்கள்.

இங்கு தமிழ்த் தலிபான்களும் ஏகாதிபத்திய நாடுகளும் ராஜபக்சவிற்கு பக்கபலமாக அமைவது வெளிப்படையானது. நரேந்திர மோடி, தமிழ்த் தலிபான்கள், ராஜபக்ச ஆகியோரின் கூட்டு தமிழ்த் தேசிய இனத்தை இலங்கையின் எல்லைக்குள் துடைத்தெறியும்.

இச்செயற்பாட்டிற்கு இனப்படுகொலை முடிவுற்ற ஐந்து வருடங்களிலும் தமிழர் பிரச்சனை மிகவும் தந்திரமாகப் பயன்படுத்தப்பட்டது. இன்னும் பயன்படும்.

ராஜபக்ச அரசின் திட்டங்களை வகுப்பதற்காக இலங்கையை நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்குச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து நரேந்திர மோடி செல்கிறார். டேவிட் கமரன் வடகிற்குச் சென்று தனது நாடகத்தை அரங்கேற்றிவிட்டு கொழும்பில் தனியார் பலகலைக் கழகத்தையும், கனிம, தனியார் மருத்துவ முதலீடுகளையும் ஒப்பந்தம் செய்தது போன்ற மற்றொரு மெகா நாடகம் அரங்கேறும். அதற்கான தயாரிப்புக்களில் இந்திய அரசு ஈடுபட்டுவருகிறது.

Exit mobile version