Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தென் ஆப்பிரிக்காவில் உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநாடு.

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 12வது சிறப்பு மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.

லிஸ்பன்நகரில் நடைபெற்ற இக்கட்சிகளின் கூட்டம், உலகப் பொருளாதார நெருக்கடி நிலைமையிலிருந்து முதலாளித்துவ நாடுகள் இன்னும் முழுமையாக மீளாத சூழலில், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை யெல்லாம் காவு கொடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு முதலாளித்துவ கட்டமைப்பு முயற்சிக்கிறது என்று சுட்டிக்காட்டியது.

முதலாளித்துவத்தின் நெருக்கடி மேலும் ஆழமடைவது குறித்தும், இந்த தரு ணத்தில் தொழிலாளி வர்க்கத்தின் சமூகக் கூட்டணிகளை மேலும் ஆழப் படுத்துவதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்தும், ஜோகன்னஸ்பர்க் மாநாட்டில் விவாதிப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் லிஸ்பன் நகரில் நேட்டோ கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஏகாதிபத்திய சக்திகளின் ராணுவ நட வடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நேட்டோவின் இந்த மாநாட்டிற்கு எதிராக, உலக அமைதியை வலியுறுத்தி உலகம் முழுவதிலும் இடதுசாரிக் கட்சிகள் அனைத்து முற்போக்கு, ஜனநாயக, அமைதியை விரும்புகிற சக்திகளை ஒன் றிணைத்து பிரம்மாண்டமான முறையில் போர் எதிர்ப்பு இயக்கத்தை நடத்துவது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 சோசலிச கியூபாவிற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் அவதூறுப் பிரச்சாரங் களை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதற்கு எதிராகவும், குரல் எழுப்பிய சர்வ தேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் செயற்குழு, கியூப ஆதரவு தீர்மானத்தை நிறைவேற்றியது.

மேலும், துருக்கி அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக சைப்ரஸில் நடை பெறும் மகத்தான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

Exit mobile version