தென்னிந்தியாவின் வன்முறை மற்றும் பாலியல் வக்கிரங்களோடு சமூகத்தைச் சீர்குலைக்கும் சினிமாக் குப்பைகளுக்கு மத்தியில் பாற்காரன் என்ற இந்தக் குறும்படம் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது. மிக நுணுக்கமான கலை நுட்பங்கள் இக் குறும்படத்தில் கையாளப்பட்டுள்ளது. கோவிலில் பாலூற்றி விரையமாக்கும் ஐயருடன் ஆரம்பிக்கும் குறும்படம் பசிக்குப் பால் கேட்கும் குழந்தையுடன் முடிவடைகிறது. பல்வேறு சமூகச் சீரழிவுகளின் பின்னாலுள்ள அரசியலை மனதை தைக்கும் வண்ணம் கவிதை போல் நகர்த்தப்படும் இப் படைப்பு தென்னிந்திய குப்பைகளுக்கு மத்தியிலிருந்து முகிழ்த்திருப்பது வியக்கவைக்கிறது.
ஒவ்வொரு குறியீடுகளும் அழகாகப் படமாக்கப்ப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் துயரத்தில் அழகைக் வெளிப்படுத்தியிருக்கும் கமரா, பின்னணியில் தவழும் இசை, ஆர்ப்பாட்டமில்லாத நடிகர்கள் அனைத்தும் இணைந்த கோர்வையை நெடுந்தீவு முகிலன் வழங்கியிருப்பது தேசிய சினிமாவின் மைற்கல்.