தென்னிந்திய சினிமாக் குப்பைகளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் திணிக்கும் தமிழ் நாட்டின் தொலைக்காட்சி சேவைகள் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் ‘புலம் பெயர் கலாச்சாரத்தை’ ஆக்கிரமித்து வருகின்றன. புலம்பெயர் நாடுகளில் தேசியம் பேசும் வியாபாரிகளின் ஒரு பகுதியினர், விஜய், ஜெயா, சண், ராஜ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அங்கு ஒலிபரப்பும் வியாபார முகவர்களாகத் தொழிற்படுகின்றனர். தமிழ் நாட்டின் சினிமா சார்ந்த மிகப்படுத்தப்பட்ட கலாசார அழிப்பை மேற்கொள்ளும் இத்தகைய தொலைக்காட்சிகளின் குப்பைகளையே தமிழ்க் கலாச்சரம் என குழந்தைகளுக்கு பெற்றோர் அறிமுகம் செய்கின்றனர்.
போராடும் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாகவன்றி சீரழிந்து சிதைந்துபோன மக்கள் கூட்டமாக ஈழத் தமிழர்களை மாற்றுவதில் தமிழ் நாட்டின் தொலைக்காட்சிக் குப்பைகளின் ஆக்கிரமிப்பு வளர்ச்சி பெற்றுள்ளது.
புலம் பெயர் நாடுகளில் காணப்படும் ஜனநாயக முற்போக்கு விழுமியங்களையும் உள்வாங்க்கிக்கொண்டு முன்னேறிய சமுதாயமாக ஈழத்தை மாற்றுவதற்குப் பதிலாக பல ஆண்டுகள் பிந்தங்கிய சமுதாயமாக தேய்ந்துபோவதற்கு தமிழகத்தின் கலை வியாபாரம் பங்களிக்கிறது.