Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தென்னாபிரிக்காவின் திருட்டு நோகங்களுக்காக பயன்படும் புலம்பெயர் அமைப்புக்கள்

south_africaதென்னாபிரிக்க நிறவெறி அரசு நடத்திய போர்க்குற்றங்களைக் குழி தோண்டிப் புதைத்து புறங்காலால் மண்ணைத் தள்ளி மூடிவிட்டு சமாதானப் புறா பறக்கவிட்ட பெருமை தென்னாபிரிக்க அரசையே சாரும். இதனால் மனிதப் படுகொலைகளைச் சாரிசாரியாக நடத்தும் அரசுகளும் குழுக்களும் தப்பிக்கொள்வதற்காக ஆலோசனை வழங்குவதில் தென்னாபிரிக்க அரசு முன்னணி வகிக்கிறது. இலங்கையின் கிரிமினல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தென்னாபிரிக்க அரசிற்கு செங்கம்பள வரவேற்புக் கொடுத்து இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள் என்று அழைப்பு விடுத்தார்.
அதனை நிபந்தனை இல்லாமல் தென்னாபிரிக்க அரசு ஏற்றுக்கொண்டது.
அதன் பிறகு இன்றைய பிரதமர் ரனில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளின் பேரில் தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கை வந்து தமது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். என்ன கொடுமை இது. கொடிய போர்க்குற்றவாளிகளை எல்லாம் ஒரு பேச்சளவில் கூடத் தண்டிக்காமல், மக்கள் மத்தியில் உலா வரவிட்டுள்ள தென்னாபிரிக்க அரசின் அனுபவம் ஆபத்தானது. அதனை வேறு பகிர்ந்துகொள்ள வேண்டுமா என்ற கேள்விகள் எழுமுன்னரே புலம்பெயர் அமைப்புக்கள் தென்னாபிரிக வெள்விகாரப் பிரதியமைச்சருடன் படமெடுத்துக்கொண்டனர்.
தென்னாபிரிக்காவில் வெள்ளை நிறவெறி அரசு கலைக்கப்பட்டு தேர்தல் ஊடாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவிக்கு வந்தபோது மக்கள் குதூகலித்தார்கள். கறுபினத்தவர்களாய் இணைவோம், கறுப்பினத்தவர்கள் ஒற்றுமைப்படுவோம் என்று முழங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகாரவர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்பது அப்போது மக்களுக்குப் புரிந்திருக்கவில்லை.
புதிய அரசு மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கொலைகளும் கொள்ளைகளும் குறைந்தபாடில்லை. ‘அமைதி’யும் ‘சமாதானமும்’ நிறைந்த தென்னாபிரிக்காவில் பல்தேசிய வியாபார நிறுவனங்களை கொண்டுவந்து நிறுத்தியது புதிய அரசு.
2012 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்காவின் மரிக்கான தங்கச் சுரங்கங்களில் வேலைபார்த்த தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். அமைதியாகத் தரைகளில் அமர்ந்து போராட்டம் நடத்திய மக்கள் மீது கறுப்பின அரசு துப்பாகிப் பிரையோகம் மேற்கொண்டு 44 பேரைக் கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்து சித்திரவதை செய்தது. நூற்றுக் கணக்கானவர்கள் படு காயங்களுக்கு உள்ளானார்கள்.
இப் படுகொலைகளைக் கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் வன்னிப் படுகொலைகளை முன்னுதாரணமாகக் கொண்டே தமது மக்களும் கொல்லப்பட்டனர் எனப் பேசப்பட்டது. அங்கு ஈழத்தமிழர்கள் யாரும் சமூகமளிக்கவில்லை.
இலங்கையில் நல்லிணக்கத்தையும் சமாதனத்தையும் ஏற்படுத்துவதாகக் கூறிப் போர்க்குற்றங்களை அழிக்கும் தென்னாபிரிக்காவின் பிரதி வெளி நாட்டமைச்சரை சந்திப்பதற்கு என்றே தமிழர்கள் பலர் முண்டியடித்துக்கொண்டு சென்றனர்.
தென்னாபிரிக்காவில் உரிமைக்காகப் போராடும் மக்களின் உணர்வுகளை மிதித்துக்கொண்டு சென்ற இவர்கள் அமைச்சருடன் போஸ் கொடுத்து படம் எடுத்துக்கொண்டனர்.
பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசு, மக்களவை போன்ற அமைப்புக்களே அமைச்சரின் அரவணைப்பில் குளிர் காய்ந்தன. கூட்டத்தின் முடிவில் தென்னாபிரிக்க அரசுடன் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக சந்தித்த அமைப்புக்கள் தெரிவித்தன. இவர்கள் தமது ராஜதந்திரத்தை தமது வீட்டு முற்றத்திலேயே நடத்தி மகிழ்ந்து கொண்டிருக்கலாம். அதனை விடுத்து கொலைகாரர்களோடு கைகுலிக்குக் குதுகலித்திருக்கிறார்கள்.
இதற்காகவா இவர்கள் தமிழர்களாய் ஒன்றிணைவோம் எனக் கூச்சல் போடுகின்றனர்?

Exit mobile version