துஷ்பிரயோகங்களுக்கும் முறைகேடுகளுக்கும் உள்ளாகும் பிள்ளைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்குப் புதிய கொள்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாக சிறுவர் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தகைய சம்பவங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் பிள்ளை ஒன்று தொடர்பான விபரம் பதிவான உடனேயே நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இத்தகைய சம்பவம் பதிவான சந்தர்ப்பம் முதல் பிள்ளையை சமூகமயப்படுத்தும் வரை இடம்பெறும் செயற்பாடுகளை அந்தப் பிள்ளையின் உச்ச நன்மை கருதிச் செயற்படுத்துவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் சம்பவம் ஒன்றுக்கு இலக்காகும் பிள்ளைக்கு புனருத்தாரணம் அளித்தல், தேவையான உதவிகளை வழங்குதல், சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு உதவுதல் என்பனவற்றுக்கு இந்தப் புதிய கொள்கை உதவுமென எதிர்பார்ப்பதாகவும் இதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தவுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.