சமூக மற்றும் தொழில் அபிவிருத்தி மட்டங்களிலுள்ள ஆபிரிக்க பெருவிய சமூகங்கள் மத்தியில் தொடர்ந்தும் இனரீதியான துன்புறுத்தல்கள் மறைமுகமாக நிலவிவருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. நாட்டின் சனத்தொகையில் 510 வீதமாகவுள்ள ஆபிரிக்கபெருவியர்களிடம் மன்னிப்புக் கோருவதற்கான பொதுநிகழ்வொன்றும் நடத்தப்பட்டுள்ளது. இவ் ஆபிரிக்க பெருவியரின் மூதாதையர்கள் அடிமைகளாக இங்கு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மன்னிப்புக் கோரலின் மூலம் பெருவின் பல் கலாசாரத்தைக் கொண்ட சமூகங்களுக்கிடையில் உண்மையான ஒருமைப்பாடொன்றைக் கட்டியெழுப்ப அரசாங்கம் விரும்புவதாக பெண்கள் விவகார மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் நிடியா வில்செஷ் தெரிவித்துள்ளார். இந்த மன்னிப்புக் கோரல் முக்கியமான நிகழ்வென வர்ணித்துள்ள விமர்சகர்கள் பெருவில் பாரபட்சமாக நடத்தப்படும் சமூகம் ஆபிரிக்கபெருவிய இனத்தவர் மட்டுமல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.