பாரத லக்ஷ்மனின் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபராக குற்றம் சுமத்தப்படும், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, எவ்வாறு மேலதிக சிகிச்சைக்காக அரசாங்கத்தின் அணுசரணையில் வெளிநாடு அழைத்து செல்லப்பட முடியும் என ஐ.தே.க உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றில் கேள்வி ஒன்று எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மனிதாபிமான கொள்கைகளின் படி காயமடைந்த எந்த நபரும் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இதுவரை துமிந்த சில்வா மீது குற்றம் சுமத்தப்படவில்லை. மேலும் அவர் நீதிமன்றத்தில் தேடப்படும் சந்தேக நபராக இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவர் உணர்வற்ற நிலையில் மருத்துவமனையில் இருந்ததால் காவற்துறையினர் இதுவரை வாக்குமூலம் கூட அவரிடம் எடுக்கவில்லை.
இந்நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக வெளியே அழைத்து செல்லப்படுவதை தடுக்க முடியாது என பதில் அளித்துள்ளார்.