Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துமிந்த சில்வா என்ற கிரிமினல் 30000 டொலர் செலவில் சிங்கப்பூர் அனுப்பிவைக்கப்பட்டார்.

பாரத லக்ஷ்மண் பிரேமச் சந்தர என்பவரை பட்டப்பகலில் படுகொலை செய்தவரும் ராஜபக்ச குடுபத்தின் அடியாளும், போதைப் பொருள் கடத்தல்காரருமான துமிந்த சில்வா சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பப்பட்டார்.
இவரை கொண்டு செல்வதற்கு ‘எயார் அம்பியூலன்ஸ்” என்ற தனி சிறப்பு விமானம் பயன்படுத்தப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுடன் அவரது தந்தை லால் டி சில்வா, அவரது சகோதரர் ரெய்னோ சில்வா, இரண்டு மருத்துவ நிபுணர், இரண்டு தாதியர்கள் அந்த விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒருவழிப் பயணமாக சிங்கப்பூர் செல்வதற்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட அந்த விமானத்திற்கு 30,000 அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது. துமிந்த சில்வா எம்.பி. உள்ளிட்ட வெளிநாடு செல்வதற்காக நேற்று (01) பிற்பகல் ரெய்னோ சில்வா, ‘க்ளஸிக் ரவல்ஸ்’ முகவர் நிலையத்தில் விமானப் பயணச் சீட்டுக்களை கொள்முதல் செய்திருந்தார்.
துமிந்த சில்வாவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற குழுவினர் அதிவிசேட (VVIP) விருந்தினர் செல்லும் வழியில் எவ்வித தங்குதடையுமின்றி விமானம் வரை சென்றனர். இந்தக் குழுவினர் செல்வதற்குத் தேவையான அனைத்து ஆவண, சட்டதிட்டங்கள் அனைத்தையும் விமான நிலைய சிரேஷ்ட அதிகாரிகள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தனர்.

Exit mobile version