துனிஸியாவின் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டுத் தலைவர் ஸின் எல் அபிடின் பென் அலி 90 சதவீத வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியீட்டியுள்ளார். இதன் பிரகாரம் 5 ஆவது தடவையாக மேலும் 5 வருட காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
இத்தேர்தல் நீதியும் நியாயமுமான முறையில் நடைபெற்றதாக ஆபிரிக்க ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவர் பெஞ்ஜமின் போங்கோலொஸ் தெரிவித்த போதும், தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.