எகிப்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
அந்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒஸ்னி முபாரக் தலைமையினான அரசில் ஊழலும், வேலைவாய்பின்மையும் பெருகி விட்டதாகக் கூறி மக்கள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈ
ஆர்ப்பாட்டங்களினால் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலகக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்து வரும் நிலையில் பேஸ்புக், டுவிட்டர், பிளக்பெரி மெசஞ்சர், கையடக்கத் தொலைபேசி குறுந்தகவல் சேவைகள் ஆகியன இடை நிறுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் ஆகியவை தாக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை மேலும் உக்கிரமடையலாம் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.