துனிசியாவைத் தொடர்ந்து அரபு நாடுகள் எங்கும் ஜனநாயகச் சீர்திருத்திறான போராட்டங்கள் தீவிரம்டைந்துள்ளன.
எகிப்தில் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதிலும், மக்களை ஒரும்க்கிணைப்பதிலும் துனிசியாவைப் போன்றே சமூக வலைத்தளங்களின் கணிசமான பங்கு காணப்படுகிறது. இந்திய – இலங்கை அரசுகளால் திட்டமிட்டுக் கொலைசேயப்படும் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு ஆதரவான மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்பட்த்தும் போராட்டங்களும் இதே வகையில் தீவிரமடைகிறது.
அரபு நாடுகளில் அமரிக்க ஆதரவு அரசுத் தலைவராகக் கருதப்பட்ட முபாரக் நீண்ட வருட ஆட்சிக்குப் பின்னர் மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
எகிப்தில் சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக உள்ள ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் நேற்று தொடர்ந்து நான்காவது நாளாக பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளும் தொடர்ந்து வீசப்பட்டன.தடியடியும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், மசூதியில் இருந்து தொழுகை முடிந்து வந்த பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் மசூதியின் வெளிப்பகுதி போர்க்களமாக மாறியது. கெய்ரோவின் மையப் பகுதியை நோக்கி 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர். அப்போதும் வன்முறை ஏற்பட்டது.
இந்நிலையில் கலவரக்காரர்களின் கோபத்தை தணிக்கும் விதமாக, அமைச்சரவையை கலைப்பதாக அறிவித்துள்ள முபாரக், அமைச்சரவையில் ஊழலற்ற நேர்மையாளர்களுக்கும, இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
நேற்றிரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்தார் முபாரக்.
ஆனாலும் முபாரக்கின் இந்த அறிவிப்பினால் சமாதனமடையாத ஆர்ப்பாட்டக்காரர்கள், தொடர்ந்து தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.