Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துண்டாடப்பட்ட வடமாகாண முதலமைச்சர் இலங்கை அரசுக்கு எதிராகவும் பேசிய வியப்பு

vikneswaran60 ஆண்டுகால வரலாற்றுச் சுவடுகளைக் கொண்ட தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தை சட்ட வரம்புகளுக்குள் மட்டுமே முடக்கும் இந்திய அரசு உட்பட ஏகபோகங்களின் சதி இலங்கையில் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. துண்டாடப்பட்ட வடமாகாணத்தின் முதலமைச்சராக சுய நிர்ணய உரிமைக்கன முழக்கத்தை முன்வைத்துத் தெரிவான சி.வி.விக்னேஸ்வரன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சட்டரீதியாக தீர்த்துவைப்பதாகவும் மறுபுறத்தில் 13 வது திருத்தச் சட்டத்தில் ஆளுனருக்கான அதிகாரத்தைக் குறைப்பதற்காகப் தெரிவானதாகவும் மேடைகளில் முழங்கிவருகிறார்.
குறைந்தபட்ச அறிவியல் தேடல்கூட இன்றி 30 வருடப் போராட்டத்தால் உருவான வியாபார மற்றும் ஏகாதிபதிய ஆதரவு தமிழ் சமூகம் விக்னேஸ்வரனை நம்புங்கள் என்று கோருகின்றது.

‘வடமாகாண ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் வடமாகாண சபையை திறமையாக வழி நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். என்று கூறும் விக்னேஸ்வரன் கூறியதை தலையங்கங்களாக்கி தமிழ் ஊடகங்கள் பிரசுரித்துள்ளன.

விக்னேஸ்வரன் இலங்கை பாசிச அரசிற்கு எதிராக அவ்வப்போது தவறுதலாகக் கருத்துகளை வெளியிடும் போது வியப்படையும் ஊடக வியாபாரிகள் அவற்றை பிரதானப்படுத்தி செய்திகளாக்கி விடுகின்றனர்.

Exit mobile version