Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துக்குத் தண்டனை – சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் – ஈழத் தமிழரின் தார்மீகக் கடமை

மக்களை அழிக்கும் அதிகார மையங்களுக்கும் அரசுகளுக்கும் எதிராகப் போராடியே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது வரலாறு கற்றுக்கொடுக்கும் யதார்த்தம். உலகம் முழுவதும் ஜனநாயம் குறித்துப் பறைசாற்றுகின்ற ஐரோப்பிய அமரிக்க அரசுகளின் அடிமை அமைப்பான ஐக்கிய நாடுகள் நிறுவனத்திலிருந்து அனைவரும் அண்ணார்ந்து பார்த்துகொண்டிருக்க தென்னாசிய மூலையில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தது இனவழிப்பை நிறைவேற்றி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இறுமாப்போடு ஆட்சியில் அமர்ந்துகொண்டு இன்னும் அழிப்ப்பதற்கு ஆணையிடுகிறது ராஜபக்ச அரசு.

ஈழப்போராட்டம் குறித்தும் மனித உரிமை குறித்தும் பேசியவர்கள் இப்போது கொலைகளின் சூத்திரதாரிகளோடு கைகோர்த்துக்கொண்டனர். ராஜபக்ச அரசோடும், அமரிக்க ஏகாதிபத்தோடும், இந்திய அரசோடும் மூடிய அறைகளுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதாகப் பாசங்கு செய்கின்ற ஒவ்வொரு கணத்திலும் மக்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் நாட்டின் ஒரு குறித்த முன்னணி சக்திகள் மத்தியிலாவது ஈழப் போராட்டத்தின் இரத்தச் சுவடுகள் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. அவர்கள் தமக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். சிறுகச் சிறுக உருவாகும் எதிர்ப்பலைகளையும், அனுதாப உணர்வலையைகளையும் இந்திய அரசு கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை. துக்குத் தண்டனைக்கு நாள்குறித்து அப்பாவிகளை அறிவித்த நாளில் கொலைசெய்தே தீருவோம் என்கிறது.

ஈழப் போராட்டம் குறித்து உணர்ச்சி பொங்கப் பேசிய ஒவ்வொரு இனவாதியும் அழிக்கும் இந்திய அரசோடு பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். கொல்லப்படுவோரின் உயிரை தமது அரசியல் இலாபத்திற்கு விலை பேசுகின்றது அந்தக் கூட்டம்.
இவ்வேளையில் சென்னையில் வழக்குரைஞர்கள் போராடத் துணிந்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா எண்ணியிருந்தால் தூக்குத் தண்டனைக் கொலைகளை நிறுத்தியிருக்க முடியும்.

இந்திய அதிகாரவர்க்கம் தாம் நினைத்த அத்தனை கொலைகளையும் எந்தத் தடையுமின்றி நிகழ்த்திக் காட்ட முடியும் என அறிவித்திருக்கிறது.
இதுவரைக்கும் ஈழத் தமிழர் குறித்துப் பேசிய இனவாதிகள் தாம் அதிகாரவர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என அறிவித்திருக்கிறார்கள்.

பிரதான இடங்களில் அதிரடிப் பொலீஸ் படையினர் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட முன்வரும் ஒரு சில அமைப்புக்களே ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் நண்பர்கள் என அடையாளம் காட்டுகின்றனர். இன்று நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்கள் ஆதரவு வழங்குதல் என்பது அவர்களின் தார்மீகக் கடமை.

மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

ஈழத்தின் மீதான போர் புரிந்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற போர்க்குற்றவாளி ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக் கோரியும், விடுதலை செய்யக்கோரியும் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் 27.8.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்ட விவரத்தை இங்கே தருகிறோம். அனைவரும் வருமாறு கோருகிறோம்.

இடம்: பனகல் மாளிகை, சைதாப்பேட்டை
நாள்: 27.8.2011
நேரம்: மாலை 4.30 மண

தலைமை: வே. வெங்கடேசன், சென்னை ம.க.இ.க செயலாளர

சிறப்புரை: மா.சி.சுதேஷ்குமார், மாநில இணைச்செயலாளர், பு.ஜ.தொ.ம

* இராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்! இது அநீதி!! தன்மானமுள்ள, மனிதாபிமானமுள்ள எவரும் இதனை எதிர்த்து போராடவேண்டும்.

* தடா என்ற கொடிய கருப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து, பல்வேறு சித்திரவதைகள் செய்யப்பட்டுத்தான் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டது. முதலில் இந்த கருப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியதையும் அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதும் பச்சை பாசிசம்!

* இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை பரிசீலிக்காமலே ஏற்கனவே, முடிவு செய்துவைத்த கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பைதான் உச்ச நீதிமன்றம் அன்று வழங்கியது. கருணை மனுப்போட்ட பின்னர், அவர்களது மரணத்துடன் விளையாடத் தொடங்கிய காங்கிரசு அரசு, தற்போது அவர்களை தூக்கிலிட அனுமதித்துள்ளது.

* இந்தத் தீர்ப்பன் அடிப்படையில் 21- ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் சிறைதண்டனையும் சொல்லமுடியாத கொடுமைகளையும் அனுபவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை என்பது என்னவகை நீதி?

* ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தான் இராஜபக்சே, இராஜபக்சே இனப்படுகொலை செய்தவன், போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் போராடிக் கொண்டு வருகின்றனர். இராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்குத் துணைபுரிந்த இந்திய அரசு, இராஜபக்சேவை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளைதான் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரறிவாளன், சாந்தன், முருகனின் கருணை மனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டதன்மூலம் தனது நோக்கத்தை மீண்டும் தெளிவுப்படுத்தி உள்ளது.

* ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க இராஜபக்சேவுக்கு உதவுவதன் மூலம் தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள இந்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியே பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத்தண்டனை!

* ஈழத் தமிழர்களின் சுயநிரணய உரிமைக்காகவும், இந்திய அரசின் தெற்காசிய மேலாதிக்கத்தை வீழ்த்தவும், இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்கவும், பேரறிவாளன்- சாந்தன்- முருகன் ஆகியோரின் விடுதலைக்காகவும் போராடுவோம்!

அனைவரும் வருக!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

Exit mobile version