பிரிட்டிஷ் தொழிற்கட்சி எம்.பி. போல் மேர்பி தலைமையிலான பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் தூதுக்குழு ஜனாதிபதியைச் சந்தித்தபோதே ஜனாதபதி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இக்குழுவிடம், விடுதலைப்புலிகள் விரும்பியிருந்ததை கொடுக்க முடியாது, ஆயினும் அதிகாரப் பகிர்வு தொடர்பான ஏதாவது நியாய பூர்வமான விடயங்களில் சகல கட்சிகளினதும் கருத்தொருமைப்பாடு அவசியமெனவும் அதனைப் பாராளுமன்றத்தின் மூலம் வழங்கமுடியுமெனவும் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, சில அரசியல் கட்சிகள் ஏற்கனவே சாதகமான முறையில் பதிலளித்துள்ளன. தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை மேற்கொள்வதை எதிர்பார்க்கின்றோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அத்துடன் வடபகுதி மக்களில் அநேகமானோர் தற்போது தண்ணீர், மின்சாரம், பாடசாலைகள், சுகாதார சேவைகள், கல்வி போன்றவற்றையே விரும்புவதாக தூதுக்குழுவிடம் விபரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.