Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீண்டாமை : அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரதம்.

  
ஆலயங்களில் அர்ச்சனை செய்பவர்களிடையே தீண்டாமையை கடைப்பிடிப்பதை கண்டித்து திருவண்ணாமலையில் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2006 ம் ஆண்டு அறிவித்தது. இதற்காக திருவண் ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை ஆகிய இடங்களில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும், ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும் துவக்கப்பட்டு, அவைகளில் பல்வேறு சாதிகளை சார்ந்த 206 மாணவர்க ளுக்கு ஒன்றரை ஆண்டு காலம் பயிற்சி அளிக்கப்பட்டது. நாட்டில் உள்ள பல் வேறு தரப்பினர்களிடையே இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்நிலையில் மதுரை கோயிலை சேர்ந்த பார்ப்பன அர்ச்சகர்கள் உச்ச நீதி மன்றத்தில் இந்த திட்டத்திற்கு இடைக் கால தடை பெற் றனர். பார்ப்பன குலத்தில் பிறந்த சிவாச் சார்யார்கள் மற்றும் பட்டாச் சார்யார்களை தவிர வேறு சாதியில் பிறந்தவர்கள் சாமி சிலை களை தொட்டு அர்ச்சனை செய்தால் அதன் புனித தன்மை கெட்டு தீட்டு ஏற்பட்டுவிடும். இதனால் பல லட்சக்கணக் கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் தமிழக அரசால் துவக்கப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளும் மூடப்பட்டன. அரசின் வாக்குறுதிகளை நம்பி பயிற்சி பெற்ற மாணவர் களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப் பட்டது.

எனவே அனைத்து சாதியினரும் அர்ச் சகராகும் திட்டத்திற்கு கடந்த 4 ஆண்டு காலமாக உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட் டுள்ள தடையாணையை நீக்க வேண்டும், ஆலயங்களில் தீண்டாமையை கடைப்பிடிக் கும் பார்ப்பனர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமை தாங்கினார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சங்க நிர்வாகிகள் அரங்கநாதன், கணே சன், சண்முகம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

Exit mobile version