Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திஸ்ஸவிதாரண லண்டன் கூட்டத்தில் குழப்பம்

திஸ்ஸ நாயகத்தின் பிரச்சினையானது ஊடகப் பிரச்சினையல்ல. அது பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினை. இதுகுறித்து நாங்கள் அமைச்சரவையில் கலந்துரையாடினோம். இது பயங்கரவாத செயற்பாடாக இல்லாவிட்டால் இதில் தனக்கு தiலிட முடிந்திருக்கும் என ஜனாதிபதி கூறினார்ஷஷ என அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தக் கருத்தரங்கு ஈ.பி.டி.பி அமைப்பின் துணைச் சங்கமொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் பிரதான விரிவுரையாளராக திஸ்ஸ வித்தாரண கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய திஸ்ஸ வித்தாரணவின் உரையானது, படுகொலையை நியாயப்படுத்துவதற்காக அவரினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் இடதுசாரி தலைவர் ஒருவருக்குப் பொருத்தமற்ற மிகவும் அறுவறுப்பானதாக அமைந்திருந்தது. இந்த நிலைமையானது எந்தவொரு யுத்தத்திலும் தவிர்க்க முடியாதது.

இது இன்று நேற்று நடந்தவையல்ல. 1971ம் ஆண்டு, 89ம் ஆண்டுகளிலும் இவை இடம்பெற்றன. இதற்காக அரசாங்கத்தை சாடுவதால் பயனில்லை. யுத்தங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

பயங்கரவாதம் இல்லாமல் போவதன் மூலம் நாட்டிற்கு அதனைவிட நன்மை ஏற்பட்டுள்ளது. திஸ்ஸ வித்தாரணவின் இந்த உரை காரணமாக ஆத்திரமடைந்த கூட்டத்தில் இருந்தவர்கள் தொடர்ந்தும் அவரிடம் கேள்வியெழுப்பியதுடன், உரைக்கு இடையூறு செய்ததன் காரணமாக அவர் தனது உரையை இடைநடுவில் நிறுத்த நேர்ந்தது. இந்தக் கேள்வியை எழுப்பியவர்களில் இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் ஏற்பாட்டாளர் உவிந்து குலகுலசூரிய மிகவும் சுருகு;கமாக திஸ்ஸ வித்தாரணவிடம் கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.

நீங்கள், காலஞ்சென்ற கலாநிதி எம்.என்.பெரேராவின் உண்மையான உறவினரா?|| எனக் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு மறுநாள் பிரித்தானிய நாடாளுமன்றக் குழு அறையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சமுகமளிப்பதையும் நிராகரித்திருந்த திஸ்ஸ வித்தாரண, ஷஷஉவிந்து வராவிட்டால் மாத்திரமே நான் அந்தக் கூட்டத்திற்கு வருவேன்|| என நிபந்தனை விதித்தப் பின்னரே அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கு உவிந்து வந்திருப்பதைக் கண்ட ஏற்பாட்டாளர்கள் அவர் அருகில் சென்று, திஸ்ஸ வித்தாரணவை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தக் கேள்விகளையும் கேட்கவேண்டாம் என வாக்குறுதியைப் பெற்று அதனை திஸ்ஸ வித்தாரணவிடம் தெரிவித்ததை அடுத்து அவர் அந்தக் கூட்டத்தில் நீண்ட நேரத்திற்குப் பின்னர் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் உவிந்து அமைதியாக இருந்த போதிலும், கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனையோர் திஸ்ஸ வித்தாரணவிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். ஷஷஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து நன்கு உணர்ந்துள்ளார். ஜனாதிபதி மிகவும் சரளமாக தமிழைப் பேசி, தமிழ் மக்களின் மனதை வென்றெடுப்பதைப் பாருங்கள்|| என அமைச்சர் கூறியதை அடுத்து கூட்டத்தில் பாரிய சிரிப்பொலி ஏற்பட்டது.

இதுதான் வருடத்தின் சிறந்த நகைச்சுவை என அவர்கள் கூறியதை அடுத்து திஸ்ஸ வித்தாரண பதிலளிக்க முடியாது திணறியுள்ளார். கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரா என்ரி லாவ், கூட்டத்திலிருந்தவர்களை அமைதிப் படுத்த பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டார்.

அமைச்சர் திஸ்ஸ வித்தாரண முன்தினமும், அன்றைய தினமும் அமைச்சரிடம் கேள்வியெழுப்பி அமைச்சரை அசௌகரியத்திற்குள்ளாக்குவதைத் தவிர்ப்பதற்காக பிரித்தானியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அம்சா, தமது பிரதிநிதிகள் பலரை பல இடங்களில் அமரச் செய்து உரைக்கு தடை ஏற்படாத வகையில் கேள்விகளைக் கேட்கச் செய்துள்ளார். இதனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனயைவர்கள் அறிந்துகொண்டதன் பின்னர் கேள்வியெழுப்புவதைத் தவிர்த்துக்கொண்டுள்ளனர்.

நன்றி லங்கா நியூஸ் வெப்
Exit mobile version