ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார். நாட்டின் இறைமைக்கு எதிரான கட்டுரைக்கு உரித்துடையவர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன.
திஸ்ஸநாயகத்தை விடுவிக்கக் கோரி கடந்த சில மாதங்களாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் ஓராண்டு நினைவு தினத்தின் போதும் அரசாங்கத்துக்கு இது குறித்து அழுத்தம் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக லசந்தவின் மனைவியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.