Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திஸ்ஸநாயகத்திற்கு பொது மன்னிப்பாம்.

இன்று சர்வதேச ஊடக சுதந்திர தினம். உலகின் ஊடகவியளார்கள் பாதுகாப்புடன் வாழத் தகுதியற்ற நாடாக இலங்கை கருதப்படுகிறது. போர்க்காலத்திலும் அதற்கு முன்னரும் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியளார்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடத்தல், தாக்குதல், என இராணுவக் கணிக்காணிப்பின் கீழே இலங்கையில் ஊடகவியளார்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. ராஜபட்சேவின் குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எதுவிதமான கருத்துக்களையும் எழுத முடியாமல் மௌனிகளான ஊடகவியளார்கள் அதிகம் பேர் உள்ள நிலையில் கடந்த ஆண்டு. ஊடகவியளார்கள் திஸ்ஸநாயகம் புலிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் பிணையில் அவர் விடுதலையானார். திஸ்ஸநாயகத்தின் கைது உலகெங்கிலும் ஊடகவியளார்களிடையே கடும் அதிருப்தியை தோற்று வித்திருந்த நிலையில் சர்வதேச விருதுகள் சிலவும் அவருக்கு வழங்கப்பட்டது. இதோ இந்த ஊடகங்களுக்கான சுதந்திர நாளின் திஸ்ஸ்நாயகத்திற்கு பொது மன்னிப்பு வழங்குவாத அறிவித்திருக்கிறார் ராஜபட்சே. பெரும் இனவெறியர்களையும் ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசியல் ரௌடிகளையுமே தனது அமைச்சர்களாகக் கொண்டியங்கும் ராஜபட்சே சர்வதேச அளவில் தனக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை கழுவும் முயர்ச்சியாகவே இது கருதப்படுகிறது.

Exit mobile version