நிதி மூலதனத்தையும் பங்கு சந்தையையும் ஆதாரமாகக் கொண்டு இயங்கும் இன்றைய உலகப் பொருளாதாரம் பங்கு சந்தை சரிவுகளை என்றும் இல்லாதவாறு எதிர் கொள்கிறது. FTSE எனப்படும் பிரித்தானிய பங்கு சந்தையின் கடந்தவார இறுதியில் சந்தைக் குறியீடு இன்னும் 1 சதவிகிதம் குறைந்துவிட்டது. பங்குகள் இன்னும் இன்று சரியும் என்ற கணிப்புக்கள் வந்துள்ளன.
கிரேக்கத்தைத் தொடர்ந்து ஸ்பானியா, இத்தாலி போத்துக்கல் போன்ற நாடுகளும் அதன் பின்னர் பிரித்தானியா பிரான்ஸ் போன்றனவும் நெருக்கடிக்கு உள்ளாகும் எனக் கணிப்புகள் கூறுகின்றன.
கடந்த வாரம் ஸ்பானியாவின் பாங்கியா என்ற வங்கி அரசால் தேசிய மயமாக்கப்பட்ட பின்னரும் அதன் பங்குகள் மேலும் சரிந்தன. வைப்புக்களை மீளப்பெற முதலீட்டாளர்கள் போட்டி போட்டனர். பணத்தைத் திருப்பிபெற முடியாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பல் தேசிய முதலீட்டாளர்கள் ஏற்கனவே பெருந்தொகைப் பணத்தைத் திருப்பிப் பெற்றுள்ளதக தெரியவருகிறது.
பல் தேசிய நிறுவனங்களின் லாபத்திற்கான கடன் வழங்கல் பொறிமுறையே வங்கிகள் திவாலாவதற்கான காரணம் எனினும் அந்த நிறுவனங்கள் ஏற்படுத்திய கடன் தொகைகளை மக்களிடமிருந்து வரிப்பணமான அரசுகள் அறவிட புதிய சட்டங்களை இயற்றுகின்றன.