பாலுமகேந்திரா தன்னுடைய கலைபயணத்தை முதன் முறையாக மலையாள திரையுலகில் துவக்கினார். அவர், மலையாளத்தில், ‘நெல்லு’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றில் பல நேர்மறையான தொழில் நுட்ப மாற்றங்களை ஏற்படுத்திய இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திர பல விருதுகளைப் பெற்றவர். மகேந்திரா. லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
தமிழ் நாட்டில் இலங்கைக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் லெனின் மொராயஸ் போன்றோர் பல திரைப்படங்களில் பணியாற்றியும் அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஈழத் தமிழர்களுக்கு எதிரான தென்னிந்திய சினிமாத்துறையின் புறக்கணிப்பையும் மீறி பாலு மகேந்திராவின் அசாத்திய திறமை அங்கீகாரம் பெற்றது.
977ல் வெளியான முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். முதன் முறையாக இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. இந்தப் படம் 1978ல் வெளியானது. தொடர்ந்து, பாலுமகேந்திரா ‘மூன்றாம் பிறை’, ‘அழியாத கோலங்கள்’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘மறுபடியும்’, ’சதி லீலாவதி’, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தலைமுறைகள் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர்களாக உள்ளனர். புகழ்பெற்ற புதிய தலைமுறை இயக்குனர்களான தங்கமீன்கள் ராம் போன்றவர்கள் பாலு மகேந்திராவால் பயிற்றப்பட்டவர்கள்