Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திரு பிறேம்குமார் குணரட்ணம் மற்றும் செயற்பாட்டாளர் திமுது ஆட்டிக்கல கடத்தல் : நடந்தது என்ன?

அரசியல் ஆர்வலர்கள் மற்றும் இலங்கை மக்கள் போராட்டம் இயக்கத்தின் தலைவர்கள், திரு பிறேம்குமார் குணரட்ணம் மற்றும் செயற்பாட்டாளர் திமுது ஆட்டிக்கல 6 ஏப்ரல் 2012அன்று காணாமல் போயுள்ளனர். அவர்கள் இருவரும் காணாமல் போவதற்கு முன் ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி.) வில் இருந்து பிரிந்து சென்ற கருத்துவேறுபாடான குழுவினால் ஆரம்பிக்கப்படவிருந்த முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் (FSP) முதல் மாநாடுக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
FSP கட்சி உறுப்பினர்களின் கூற்றுப்படி இந்த இரு அரசியல் ஆர்வலர்களும் அரசின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்தனர் என்று நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இன்று மேற்படி இருவரும் எங்குள்ளனர், எப்படி உள்ளனர் என்ற எந்த தகவலும் இல்லை.
திரு பிறேம்குமார் குணரட்ணம் மக்கள் போராட்டம் இயக்கத்தின் (PSM) முக்கிய தலைவர் மற்றும் திருமதி Attygalle பெண்கள் மற்றும் பிரண்ட்லைன் சோசலிஸ்ட் கட்சி (FSP) யின் ஒரு முன்னோடியாகவும், அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கு செயலாளர் இருந்து வருகிறார்.
திரு.குணரத்தினம் FSP உருவாக்கும் கருவியாகவும், தீவிரமாக உழைத்ததனாலும் 9ஏப்ரல் 2012இல் அதிகாரப்பூர்வமாக அதன் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.PSM வடக்கில் நடைபெறும் நீதிக்கும் சட்டத்துக்கும் முரணான கொலைகள், சட்டவிரோத தடுத்து வைத்தல் மற்றும் இராணுவதால் நிகழ்த்தப்படும் கொடுமைகள் மற்றும் அரசின் மனித உரிமைகளை எதிர்த்து, அமைப்பு ஆரம்பித்த நாளில் இருந்து தீவிரமாக பிரச்சாரம்.செய்து வருகிறது.

நடந்தது என்ன?

இலங்கை அரசபடைகளால் பிரேம்குமார் குணரத்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டது குறித்த தகவல்களை முன்னிலை சோசலிசக் கட்சியின் செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.அத்தகவல்களை கட்ட்சியின் முக்கியஸ்தர் வருண ராஜபக்ச இனியொருவுடன் நேற்றுப் பகிர்ந்துகொண்டார்.
திரு குணரட்ணம் 6ஏப்ரல் Gemunu மாவத்தை, Kiribathgoda (கம்பஹா மாவட்டம்), No.29/1அவரது தற்காலிக வாசஸ்தலத்தில் இருந்து கடத்தப்படுள்ளார்.என்று நம்பப்படுகிறது.அவர் கட்சி கூட்டத்தில் பங்கு பற்றி விட்டு 6ஏப்ரல் சுமார் மாலை 5மணியளவில் Kiribathgoda வில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு கட்சி உறுப்பினர் ஒருவரால் வாகனத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார்.அதே நாள் முன்னிரவு சுமார் 11மணியளவில், திரு Gunaratnam அதே கட்சி உறுப்பினருடன் பேசியதுடன் தன்னை மற்றும் அடுத்த நாள் (7ஏப்ரல்) காலை 5மணிக்கு தன்னை தன் இல்லத்தில் இருந்து கூட்டிக் கொண்டு போகுமாறு கேட்டுக்க் கொண்டுள்ளார்.இந்த உரையாடலின் பின் திரு குணரட்ணம் அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை.
மறுநாள் (7ஏப்ரல்), அதிகாலை சுமார் 4.30மணிக்கு திரு குணரட்ணம் வீட்டிற்கு வந்த கட்சி உறுப்பினர், அனைத்து டயறுக்கும் காற்று பிடுக்கிய நிலையில் திரு குணரட்ணம் தின் வாகனத்தின் (எண் NWKE 9457) நிறுத்தியிருப்பதை கண்டார். மேலும் அந்த கட்சி உறுபினர் வீட்டின் கதவும் பூட்டுக்களும் உடைத்து இருப்பதை கண்டார்.அங்கு திரு Gunaratnam காணவில்லை மற்றும் அவரது மொபைல் போனில் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
அதேவேளை, ஆயுதம் தாங்கிய 4, 5 நபர்கள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் குணரட்ணம் தங்கியிருந்த வீட்டுக்கு வந்ததாகவும், தன்னை வீட்டின் விளக்குகளை அணைத்து விட்டு உள்ளே போகுமாறு அவர்கள் கூறியதாகவும், சிறிலங்கா காவல்துறையினரிடம் அயலில் உள்ள பெண் ஒருவர் கூறியுள்ளார்.

அதிகாலை 5.15 மணிக்கு வெளியே பார்த்த போது வழக்கத்துக்கு மாறாக எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை 8 மணி வரை, குணரட்ணத்தின் +94-71-3519722 என்ற இலக்க கைபேசிக்கு அழைத்த போது, மணி ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆனால் பதில் இல்லை. தற்போது அது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது அல்லது அழைப்பு பெறமுடியாத நிலையில் உள்ளது.

நேற்றுக்காலை வரை அந்த கைபேசி கிரிபத்கொட பகுதியிலேயே இருப்பதை ஜிபிஎஸ் கணிப்புகள் காண்பித்தன. எனினும் மேலதிகமான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.

காணாமற்போயுள்ள திமுது ஆட்டிக்கலவை கடைசியாக பார்த்தவர் கட்சியின் மற்றொரு தலைவரான துமிந்த நாகமுவ.

கொஸ்வத்த பேருந்து நிலையத்தில் அவர் மாலை 6 மணியளவில் திமுது ஆட்டிக்கலவை இறக்கி விட்டார்.

அவர் 32/14/7 ஹைலெவல் வீதி, ஹெனவத்த, மீகொடவில் உள்ள வீட்டுக்கே, திமுது புறப்பட்டுச் சென்றதை நாகமுவ உறுதி செய்துள்ளார்.

ஆனால் மறுநாள் காலையில் அவரது +94-77-0325567 இலக்க கைபேசிக்கு அழைத்தபோது பதிலளிக்கவில்லை.நேற்றுக்காலை காலை 11 மணி வரை அந்தக் கைபேசி மணி ஒலித்துக் கொண்டிருந்தது.

அவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டுக்குத் திரும்பவில்லை என்று உறுதியாகியுள்ளது. குணரட்னம காணாமற்போனதையடுத்து சிறிலங்கா காவல்துறைமா அதிபர், மற்றும் கிரிபத்கொட, பிலியந்தல காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டது.

“இந்தக் கடத்தல் அரசியல் நோக்கம் கொண்டது. எமது மாநாட்டை நிறுத்துவதற்கான முயற்சியே இது“ என்கிறார் முற்போக்கு சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் சேனாதீர குணதிலக.

முன்னதாக விடுமுறைக்காக சிறிலங்கா வந்த குணரட்ணத்தின் மனைவி அவுஸ்ரேலியா திரும்பும்போது விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அதேவேளை, காவல்துறையிடம் கடத்தல் பற்றிய எந்த முறைப்பாடும் தெரிவிக்கப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் கூறியுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினராலோ அல்லது வேறு எந்தக் காவல்துறைப் பிரிவினராலோ எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்றவரான குணரட்ணம் காணாமற் போனது குறித்து கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய தூதரகத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
குணரட்ணத்தை சிறிலங்கா அரசு கடுமையாக கண்காணித்து வந்ததாக நம்பகமான தவல்களை அவரது கட்சியினர் பெற்றிருந்தனர்.
அவர்கள் குணரட்ணத்தையும், திமுதுவையும் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தி வந்தனர். இவர்கள் இருவரையும் சிறிலங்கா படையினரே கடத்தியுள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.

Exit mobile version