Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருமாவளவன் மீது ராமதாசின் திடீர் பாசம்.

ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டு தமிழகத்தில் போராட்டங்கள் நடந்த போது கருணாநிதி.,ஜெயலலிதா இல்லாத மூன்றாவது புதிய அணி ஒன்றை உருவாக்கும் முயர்ச்சியை சிலர் முன்னெடுத்தனர். வைகோ, ராமதாஸ், திருமா, உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களின் அணி என்று தனித்துப் போட்டியிடலாம் என்கிற அளவில் அந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தச் சிந்தனையை முதன் முதலாக முன் வைத்தது விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவந்தான். ஆனால் ஆரம்ப நிலையிலேயே இந்த முயர்ச்சியை கிள்ளி எரிந்தவர் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த ராமதாஸ். ” கூட்டணி எல்லாம் சரிதான் யார் செலவு செய்வார்கள்? என்று கேட்டு மொத்தக் கூட்டத்தையும் அதிர்ச்சியடைய வைத்தாராம் இந்த ஒன்றுமே இல்லாத ஏழை ராமதாஸ். அத்தோடு அந்தக் கூட்டணி முயர்ச்சிகள் திவாலாக ஆளிக்கொரு கூட்டணியில் செட்டிலானார்கள். கருணாநியிடம் சேர்ந்தவர்கள் கருணாநிக்காகவும் ஜெயலலிதாவிடம் சேர்ந்தவர்கள் ஜெ வுக்காகவும் பேசிய ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரித்தனர். சுமார் ஐந்தாண்டுகாலம் கடைசி வரை பதவியே விலகாமல் அதிக வருவாய் வரக்கூடிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் தன் மகன் அன்புமணியை வைத்து கோடி கோடியாய் சம்பாதித்த ராமதாஸ் ஜெயலலிதாவோடு சேர்ந்து ஏழு தொகுதிகளிலும் படு தோல்வியடைந்தார். போயஸ்கார்டனில் இருந்து அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட ராமதாஸ் அறிவாலயத்தில் இப்போது தஞ்சமடைந்து விட்டார். ஆனால் திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் திருமாவை அப்போது களட்டி விட்ட ராமதாஸ் இப்போது மீண்டும் புதிய உறவு கொண்டாடுகிறார்.திருமண மண்டப திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ் ’’பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பாடுபடுவதுதான் நோக்கமாகும். வட ஆற்காடு மாவட்டத்தில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் ஒடுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு அடிமைகளாக உள்ளனர்.ஒடுக்கப்பட்ட சமுதாயங்களாக உள்ள தலித் மக்களையும் வன்னிய மக்களையும் இந்த அளவுக்கு ஒடுக்கி வைத்தது யார்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். எனது தம்பி திருமாவளவனின் சகோதரர்களும் இங்கு வந்திருக்கின்றனர். உழைக்கும் கரங்கள் அனைவரும் ஒன்று கூடி இருக்கிறோம்.ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக நானும், திருமாவளவனும் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் உழைத்தால்தான் மற்ற சமுதாய மக்களுக்கு நன்மை கிடைக்கும். ஆனால் ஒடுக்கப்பட்ட இந்த இரு சமுதாய மக்களுக்கு இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை.ஆதிக்க சக்திகள் தொடர்ந்து நம்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமா? நம்மை இழிவுப்படுத்துவதை தொடர்ந்து தாங்க வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக பா.ம.க.வும்- விடுதலை சிறுத்தையும் இணைந்து பாடுபடும்’’என்று பேசினார்.

தம்பி திருமா திடீர் பாசம்.

வேலூரில்

Exit mobile version