திருப்பதிக்கு வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பியே அங்கு சென்றதாக திருப்பதிக் கோவில் தொலைக்காட்சிக்குத் தெரிவித்த ராஜபக்ச பௌத்த சிங்களத்தின் குறியீடக அனுராதபுரத்தில் பிரச்சரத்தை ஆரம்பித்தார்.
கிறிஸ்தவ குடும்பப் பரம்பரையைச் சேர்ந்த பேரினவாதி ராஜபக்ச மக்களைச் சூறையாடவும், இலங்கையில் இரத்தக்களரியை ஏன்ற்படுத்தவும் ஏழுமலையான் அருள் பாலிப்பார் என திருப்பதி தேவஸ்தானமும் இந்துத்துவ வாதிகளும் நம்பிக்கை கொள்வதுபோல் செய்திகள் வெளிவந்தன. இனக்கொலையாளி மோடியை ராமர் ஆட்சிக்யில் அமர்த்தும்போது ஏழுமலையான் விடமாட்டார் என்கிறார்கள்.
தனது கரங்கள் கறைபடியாதவை என்றும் ஆனால் தன்னைக் காட்டிக்கொடுக்க சிலர் முற்படுகிறார்கள் என்றும் மகிந்த தெரிவித்தார்.
லட்சக்கணக்கில் மக்கள் கொலைசெய்யப்பட்ட மனிதப்படுகொலையைத் தலைமைதாங்கி நடத்திவிட்டு மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டோம் என முழுச் சமூகத்தையும் ஏமாற்றிய மகிந்த ராஜபக்சவின் பின்புலத்தில் செயற்பட்டவை மேற்கு நாடுகளும் இந்தியாவுமே.
மகிந்தவின் பணி முடிந்த பின்னர் இனப்படுகொலையின் போது மகிந்தவோடு ஒத்துழைத்த மைத்திரிபால சிரிசேன, ராஜீவ செனிவரத்ன போன்றவரக்ள் ஆட்சியைத் தொடர மேற்கு ஏகாதிபத்தியங்கள் விரும்புகின்றன.