திருகோணமலை மாவட்டத்தில் யுத்தம் காரணமாக சொத்துடமைகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவயவங்களை இழந்து இடம்பெயர்ந்து அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட நிலையில் வறுமையில் வாடும் குடும்பங்களில் கணவனை இழந்த குடும்பங்கள், அங்கவீனமடைந்த குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி, மணல்ச்சேனை, பட்டித்திடல், கட்டைப்பறிச்சான் ஆகிய முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கும், வன்னியில் இருந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் மீண்டும் தமது சொந்த ஊருக்குச் சென்று உறவினர் நண்பர்கள் வீடுகளிலும், சொந்த வீடுகளிலும் அடிப்படை வசதிகள் உதவிகள் எதுவும் இன்றி வாழும் குடும்பங்களில் ஒரு பகுதியினருக்கும் மேற்படி நிதி உதவிகள் வழங்கப்பட்டது. மொத்தம் 470 குடும்பங்களுக்கு ஆறுஇலட்சத்துப் பத்தாயிரம் (ரூபா610000) பெறுமதியான நிதி உதவி வழங்கப்பட்டது.