31.03.2009.
திருகோணமலை பாலையூற்றைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலும் இரு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் இன்று கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த மாதம் 11 ஆம் திகதி றெஜி ஜூட் வர்சா என்ற இந்த 6 வயதுச் சிறுமி பணயம் கோரி சிலரால் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே இரு சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த வேளையில் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று மேலும் இரு சந்தேக நபர்களை சில ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸார் அழைத்துச் சென்ற வேளை, ஒரு இடத்தில் விடுதலைப்புலிகள் என்று கூறப்படும் ஒரு குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கி மோதல் ஏற்பட்டதாகவும், அந்த மோதலின் போது அந்த குழுவினர் சுட்டதில், கிருஷாந்த் மற்றும் றெஜினோல்ட் என்ற இந்த சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
BBC.