Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருகோணமலையில் 109 பேர் காணமல் போயுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவுகளில் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 109 பேர் காணாமல் போனதாகவும், 82 பேர் கடத்தப்பட்டதாகவும், இலங்கையில் காணாமல் போனவர்கள், மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையர், முன்னாள் நீதிபதி மஹாநாம திலகரட்ண தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உண்மையறியும் நடவடிக்கைகளை நடத்திய பின்னர் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

தனது விசாரணைகளின் போது காணாமல் போனவர்களில் இளம் மனைவிமாரே அதிகமாக சாட்சியம் அளிக்க வந்ததாகவும் அவர் கூறினார்.

அவர்களது நிலைமை மிகவும் சோகமானதாக இருந்ததாகவும், அவர்களில் பலர் வாழ வழியில்லாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடத்தப்பட்டவர்களில் சிலரைக் கொண்டு சென்ற வெள்ளை நிற வான்கள் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளின் ஊடாகவே எந்தவிதமான சோதனையும் இன்றியே சென்றதாக சாட்சியங்களில் சில குற்றஞ்சாட்டியதாகவும் மஹாநாம கூறியுள்ளார்.

Exit mobile version