Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருகோணமலையில் மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை லிங்கநகரில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 பேர் கொண்ட குழுவினரால் மின்சார சபை ஊழியர்கள் தாக்கப்பட்டதனைக்   கண்டித்து   ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் திங்கட்கிழமை தொடக்கம் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Exit mobile version