Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருகோணமலையில் அமரிக்க இலங்கை கடற்படைகள் கூட்டுப்பயிற்சி : கொலையாளிகளின் இணைவு

navy_training_tringoதெற்காசியாவில் அமரிகாவின் நேரடித் தலையீடு அதிகரித்துவருகிறது. இனப்படுகொலை அரசான இலங்கை அரசுடன் இணைந்து அமரிக்க விமானப்படை போர்ப் பயிற்சிகளை மேற்கொள்கிறது.
கடந்த 2 ஆம் திகதி இந்த பயிற்சிகள் திருகோணமலை கடற்படைத்தளத்தில் ஆரம்பமாகின. பிளஸ் ஸ்டைல் என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சிகளில் 10 பேரைக் கொண்ட அமெரிக்க கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் பங்கேற்றுள்ளனர்.
எதிர்வரும் 19ம் திகதி இப்பயிற்சிகள் நிறைவடையும் உனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், இலங்கைக் கடற்படையின் சிறப்பு படகு அணி, அதிவேகத் தாக்குதல் படகு அணி, சுழியோடிகள், துரித மீட்பு அணி, என்பனவும், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்தி அணியும், சிறப்புப் படைப்பிரிவும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.
இலங்கையில் அமரிக்க அய்ரோப்பிய அரசுகள் இந்திய அரசுடன் இணைந்து நிலப்பறிப்பை மேற்கொள்கின்றன. குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் பொதுவாக இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்படும் இந்த நிலங்கள் பல்தேசிய நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. வடக்கிழக்கில் அபகரிக்கப்படும் நிலங்களுக்கு அரணாக இராணுவக் குடியிருப்புக்களும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

Exit mobile version