Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருகேதீஸ்வரம் மனிதப் புதைகுழிகள் மீண்டும் தோண்டப்படுகின்றது

இலங்கை அரசின் தொடர்ச்சியான இனப்படுகொலையின் மற்றொரு சின்னமான மன்னார் திருகேதிஸ்வரம் மனிதப் புதைகுழிகள் நாளை மீண்டும் தோண்டப்படவிருக்கின்றது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ண ஆகியோர் முன்னிலையில் 6 வது தடவையாக கடந்த 7 ம் திகதி காலை 8 மணிமுதல் மாலை 2.30 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இதன்போது மீட்கப்பட்டிருந்த 6 மனித எழும்புக்கூடுகளில் ஒரு எலும்புக்கூட்டில் உள்ள கைப்பகுதியில் ‘தாயத்து’ ஒன்று கட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை மீட்கப்பட்டுள்ள 32 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், சில மனித எலும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் உள்ளன. அப்பகுதியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் அருகில் உள்ள காட்டு மரங்களும் தற்போது வெட்டப்பட்டு வருகின்றன. மீண்டும் நாளை மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதை குழி தோண்டப்படவுள்ளது. புதைகுழிகளைப் பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி என்று இலங்கை அரசு கூட அதன் உலக எஜமனர்களோ மனிதத்தை மீட்பதற்கான போராட்டம் எழாமல் பாதுகாக்கிறார்கள்.

Exit mobile version