Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திமுக அமைச்சர் ராஜாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- டி.ராஜா.

செல்போன் நிறுவனங்களுக்கான அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வரலாறு காணாத ஊழல் நடந்துள்ளதாக மத்திய கண்காணிப்புத் துரை அனுப்பிய நோட்டீஸை பிரதமர் மன்மோகன் பொருட்படுத்தவில்லை

. இந்நிலையில் 3-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானம் 70,000 கோடி ஆனால் மத்திய தகவல் தொடர்பு மந்திரி ஊழல் செய்துள்ள்தாக சொல்லப்பட்ட 3ஜீ ஏலத்தில் இந்திய அரசுக்கு வந்த வருமானம் வெறும் இரண்டாயிரம் கோடிதான். அப்படியனால் இதில் நடந்த ஊழல் எவ்வளவு? என்ற கேள்விகள் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்நிலையில் இடது சாரிகளான சி.பி.எம். சி.பி..எம். உள்ளிட்ட எதிர்கட்சிகள் திமுகவின் மத்திய அமைச்சரான ராஜாவை டிஸ்மிஸ் செய்யுமாறு கோரியுள்ளன.இதுகுறித்து சிபிஎம் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 3ஜி ஏலம் நடந்த விதம், அதில் கிடைத்துள்ள லாபத்தை பார்க்கும்போது 2ஜி ஏலத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதுவே ராஜாவின் முறைகேடுகளுக்குப் போதுமான சான்றாகும்.டிராய் விதிமுறைகளை மீறி, முறைகேடு செய்து 2ஜி ஏலத்தை ஊழல் படிந்ததாக ராஜா மாற்றியுள்ளார் என்பது 3ஜி ஏலத்தில் கிடைத்த லாபத்தை பார்க்கும் போது யாரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். 3ஜி ஏலத்தின் மூலம் அரசுக்கு கிட்டத்தட்ட ரூ. 70,000 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஆனால் 2ஜி ஏலம் வெறும் ரூ. 2,000 கோடிக்கே விலை போனது. இதன் மூலம் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு, அரசுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ராஜா ஏற்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது.எனவே ராஜா உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரை பிரதமர் நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது.இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் டி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரிடம் தகவல் தெரிவித்த பிறகே செய்ததாக ராசா கூறி வருகிறார். ஆகவே, என்ன நடந்தது என்பது பற்றி பிரதமர் விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் பெரிய ஊழல் நடந்திருப்பது தெளிவாக தெரிகிறது. .ராசாவை நீக்குவது மட்டுமின்றி, இதில் யார் யாருக்கு தொடர்பு என்பதை கண்டுபிடிக்க விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

Exit mobile version