தஞ்சாவூர்
மாவட்டம் ஓரத்தநாடு அருகே திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரரும் கருணாநிதியின் நெருங்கிய சகாவுமான டி.ஆர்.பாலுவின் எரிசாராய ஆலை அமைவதற்கு எதிராக வடசேரி கிராம மக்கள் போராடி வருகின்றனர். எரி சாராய ஆலை அமைந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மக்களை பல்வேறு வகைகளில் சமாளிக்க திமுக அரசு முயன்று வந்தது. மக்களின் எதிர்ப்பை அடுத்து இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு ஏராளமான வெளியூர் ரௌடிகளைக் கார்களில் கொண்டு வந்து திமுக அமைச்சர் டி.ஆர் பாலு இறக்கியதாகத் தெரிகிறது. மக்கள் அச்சமடைந்த நிலையில் அவர்களை வெளியேற்றக் கேட்க போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அந்தக் கார்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் சரமாரியாக பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. ஏராளமான பொது மக்கள் போலீஸ் தாக்குதலில் காயமடைந்தனர். மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான இத்தாக்குதலுக்கு காரணமான திமுக அரசின் மேல் மட்டத் தலைவர் மீது நடவடிக்கை வேண்டும் என்பதும். அப்பகுதியில் எரிசாராய ஆலை அமைக்கும் முயர்ச்சி கைவிடப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இந்த ஆலையில் கருணாநிதி குடும்பத்தினருக்கு நேரடிப் பங்கு இருப்பதால் ஆலை கொண்டு வருவதில் அவர்கள் தீவீரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.