Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திபெத் தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை- சீன அதிபரிடம் இந்திய ஜனாதிபதி உறுதி

அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்

சீன அதிபர் ஹூ ஜின்டாவோவைச் சந்தித்துப் பேசினார் இதையொட்டி சில ஒப்பந்தங்களும் இரு தரப்பிலும் கையெழுத்தானது. இந்தியா சீனாவிடம் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க சீனா உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தது. இநிநிலையில் சீன அதிபர் இந்திய ஜனாதிபதியிடம் திபெத்தியர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் அரசியல் முக்கியத்தும் குறித்த கவலைகளை வெளிப்படுத்த இந்திய ஜனாதிபதியோ திபெத்தியார்களின் தனி நாடு கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. என்றும் திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் சீன அதிபரிடம் உறுதி மொழி அளித்தார். பரஸ்பரம் நடந்த இந்த சந்திப்புகளுக்கப்பால் தலாய்லாமாவுக்கு மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவரை ஒரு அமைதிப் போராளியாக உருவாக்கி விடுகிறது. அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியாவும் தலாய் லாமாவுக்கு அளவு கடந்த முக்கியத்துவத்தை அளித்ததோடு சீன எல்லைப் பகுதி மநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் அவரது தர்மசாலாவை அமைத்துக் கொள்ள பிரமாண்ட இடங்களையும், ஏராளமான விவசாய பண்ணைகளையும் வழங்கி சீனாவுக்கு எதிராக தலாய்லாமாவை கொம்பு சீவி விடுகிறது. ஒரு பக்கம் தலாய்லாமாவை தூண்டி விட்டு விட்டு இன்னொரு பக்கம் சீனாவுக்குப் போய் திபெத் தனி நாடு கோரிக்கையை நாங்கள் ஆதரிக்க வில்லை என்றும் சொல்கிறது…. அதுதான் இந்தியா…. ஆமாம் அதுதான் எங்கள் இந்தியா….

Exit mobile version