Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திபெத் சீனாவின் ஆளுமைக்குட்பட்டது : ஒபாமா வலியுறுத்து!

திபெத் சீனாவின் ஆளுமைக்குட்பட்ட பகுதி என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, திபெத்துக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக தலாய் லாமாவுடன், விரைவில் சீனா பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் ஆசியாவுக்கு முதன் முறையாக பயணம் மேற்கொண்டுள்ள பராக் ஒபாமா, தனது பயணத்தின் ஒரு பகுதியாக சீனா சென்றுள்ளார்.

சீன அரசு அளித்த செங்கம்பள வரவேற்பை ஏற்றுக் கொண்ட ஒபாமா, ஹூ ஜிண்டாவோ உடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதன்போது பேசிய ஒபாமா,

“திபெத் சீனாவின் அங்கம் என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது. திபெத்துக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக தலாய் லாமாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய சீன அரசு விரைவில் பேச்சு நடத்த வேண்டும்” என்றார்.

“சீனாவும், அமெரிக்காவும் போட்டி நாடுகள் அல்ல” என்று தெரிவித்த ஒபாமா, “சீனாவுடன் நட்புறவுடன் இருக்கவே அமெரிக்கா விரும்புகிறது” என்றும் தெரிவித்தார்.

Exit mobile version